ரஜினிக்காக சாப்பிடாமல் விரதம் இருந்த பிரபல நடிகை.. எதற்காக தெரியுமா?
Author: Vignesh23 March 2024, 3:02 pm
தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை.
இந்நிலையில், ரஜினிகாந்துக்காக பிரபல நடிகை ஒருவர் விரதம் இருந்தது குறித்த தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது, ரஜினியும் ஸ்ரீதேவியும் ஒரே நேரத்தில் தான் கோலிவுட்டில் வளர தொடங்கினார்கள். அது இருவருக்கும் இடையில் ஒரு நெருக்கத்தினை கொடுத்தது. தேவையான நேரத்தில் எப்போதுமே துணை இருப்பார்களாம். அப்படி ஒரு முறை ரஜினிக்காக ஸ்ரீதேவி ஏழு நாள் விரதம் இருந்து இருக்கிறாராம்.
2011 ல் ரஜினிக்கு திடீரென உடல்களை கோளாறு ஏற்பட்டது. ஆபத்தான கட்டத்தில் அவரை சிங்கப்பூர் அழைத்துச் சென்றனர். அப்போது, இந்த விஷயம் தெரிந்த ஸ்ரீதேவி சீரடி சாய்பாபாவிடம் வேண்டி ரஜினிக்காக சாப்பிடாமல் ஏழு நாள் விரதம் இருந்து இருந்துள்ளார். ரஜினியின் உடல்நலம் தேறியஉடன் தன் விரதத்தை முடித்தாராம். இதனை ஸ்ரீதேவியே தனது நண்பர்களிடம் சொல்லி இருக்கிறார்.