மதுவுக்கு அடிமை..! இரவு பார்ட்டியில் தலைக்கேறிய போதையில் ஆட்டம்: 5 வருடம் வாய்ப்பில்லாமல் கஷ்டப்படும் பிரபல நடிகை..!
Author: Vignesh22 December 2022, 7:45 pm
நடிகை ஸ்ரீதிவ்யா( Sri Divya ) ஒரு தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட நடிகை. நடிகை ஸ்ரீ திவ்யா சிறு வயதிலிருந்தே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர்.
இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.

மேலும் ஸ்ரீதிவ்யா “ஜீவா”, “வெள்ளைக்காரதுரை”, “காக்கி சட்டை”, “பென்சில்”, “பெங்களூரு நாட்கள்”, “மருது”, “காஷ்மோரா”, “மாவீரன் கிட்டு”, என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்துள்ளார்.
ஆரம்பம் இவருக்கு அமோகமாக இருந்த போதிலும், இவர் கடந்த சில ஆண்டுகளாக நடித்த தமிழ் படங்கள் படு தோல்வியை தழுவியது. தற்போது தெலுங்கு படங்கள் மூலமாக தமிழிலும் ஒரு ரவுண்டு வரலாம் என காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நம்ம வீட்டு பொண்ணு போல இருக்கும் ஸ்ரீ திவ்யா, சினிமாக்களில் கூட மாடர்ன் உடையில் காட்டாத கவர்ச்சியை, ஆரம்ப காலத்தில் சினிமா போட்டோஷூட்டில் ஸ்ரீ திவ்யா கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் இமான் அண்ணாச்சி சொந்தமாக வீடினை கட்டியுள்ளார். இதன் கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு சினிமா நட்சத்திரங்களையும் அழைத்திருந்தார். பொதுவாக நட்சத்திரங்கள் வீட்டில் நிகழ்ச்சி நடந்தால் அங்கு மது பார்ட்டி இருக்கும்.
அப்படி இமான் அண்ணாச்சியும் வந்திருந்த விருந்தினர்களுக்கு மதுவிருந்து கொடுத்திருக்கிறார். நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ரீதிவ்யாவும் கலந்து கொண்டு அளவுக்கதிகமாக மது அருந்தியதால் போதையில் கண்டபடி ஆடியுள்ளார். உடனிருந்தவர்கள் கூறியும் கேட்காத ஸ்ரீதேவியை தெளியவைத்து பின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விசயம் கோலிவுட் வட்டாரத்தில் பெரியளவில் வெடித்ததால் நடிகை ஸ்ரீதிவ்யா வெளியில் தலைக்காட்ட முடியாமல் அவதிப்பட்டார். அதேசமயம் வாய்ப்பு கேட்டு போகும் இடத்தில் எல்லாம் இந்த விசயத்தை பற்றி கேட்பதால் அசிங்கப்பட்டு கிளம்பி விடுகிறாராம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.