ஷூட்டிங்கில் தவறாக நடந்துகொள்ள முயன்ற யாஷ்?.. அதிர்ச்சியடைந்த ஸ்ரீநிதி போட்ட பதிவு..!

Author: Vignesh
21 March 2023, 12:30 pm

கன்னட திரையுலகின் பிரபலமான நட்சத்திரமான யாஷ், கேஜிஎப் படத்தின் மெகா வெற்றியின் மூலம், சமீப காலங்களில் இந்திய சினிமாவின் மிகவும் விரும்பப்படும் திறமையாளர்களில் ஒருவராகவும், முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

2007ஆம் ஆண்டில் இருந்து நடித்து வரும் யாஷ், பெரிய ஹிட் பட்ங்களை கொடுத்ததில்லை. 2018ல் வெளியான கேஜிஎப் படம் தான் இவரின் திறமையை வெளிகொண்டு வந்தது.

இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் 2022ல் வெளியானது. கேஜிஎப் 3வது பாகம் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாக வில்லை.

இந்த நிலையில், KGF படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் யாஷ் ஸ்ரீநிதி ஷெட்டியிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு தகவல் பரவியது. இதனால் பதறிபோன ஸ்ரீநிதி ஷெட்டி இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் சோசியல் மீடியாவை தவறான செய்திகளை பரப்புவதற்காகவே சிலர் பயன்படுத்துகிறார்கள்.

shruti shetty - updatenews360 2

“தான் எப்போதும் தன்னுடைய அன்பையும், ஆனந்தத்தையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக அதை பயன்படுத்துவதாகவும், நடிகர் ராக்கிங் ஸ்டார் யாஷ் ஒரு உண்மையான ஜெண்டிமேன் என்றும், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது எனவும், அவர் தனக்கு ஒரு நல்ல நண்பன் என்றும், மேலும் தன்னை அதிகமாக ஊக்குவிப்பவரும் அவர் தான் எனவும், எப்போதும் தான் அவரது ரசிகை ” என்று பதிவிட்டு வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் நடிகை ஸ்ரீநிதி.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 687

    3

    0