நாதஸ்வரம் சீரியலில் மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் நல்ல ஒரு பெயரை சம்பாதித்தவர் தான் நடிகை ஸ்ரீதிகா. மலேசியாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து இங்கு சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக இடத்தைப் பிடித்தார் .
பார்ப்பதற்கு ஹோம்லியாக மிகவும் பவ்யமான தோற்றத்தில் இருந்த ஸ்ரீதிகாவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இவர் மகராசி சீரியலில் தன்னோடு நடித்து வந்த நடிகர் ஆர்யன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ஆரியனுக்கும் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் முதல் கணவரை ஏன் பிரிந்தேன்? விவாகரத்து செய்வதற்கான காரணம் என்ன? என்பது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது, “என்னுடைய முதல் கணவர் மிகவும் நல்ல மனிதர் தான். அவர் மீது எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால் எங்களுக்குள் எங்கள் இருவருக்கும் அந்த வாழ்க்கை சரிவர அமையவில்லை.
ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. அது போக போக சரியாகிவிடும் என்று நாங்கள் இருவரும் நினைத்தோம். ஆனால், போகப் போக பிரச்சனை அதிகமாகி கொண்டுதான் இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் இதற்கு மேல் இந்த வாழ்க்கையை தொடர முடியாது என நாங்கள் இருவருமே சமரசமாக பேசி அந்த வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட்டோம்.
எங்களுக்கு ஒன்றும் சிறுவயதில் திருமணம் ஆகவில்லை. நல்ல மெச்சியூர் ஆன 30 வயசில் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான். ஆனால், எனக்கு அந்த திருமண வாழ்க்கை நான் நினைத்தது போல் அமையாதுதால் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. அதற்கான மிக முக்கிய காரணம், “இயற்கையான குணத்துடன் ஒருவர் இருக்க வேண்டும். நமக்காக அவர்களை மாற்றிக்கொள்ள ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது.
அப்படிப்பட்ட நபர்களோடு தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கிட்டத்தட்ட எனக்கு ஏற்பட்டது போலவே பிரச்சனை தான் ஆரியனுக்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்டது. இதனால் முதல் மனைவியை பிரிந்த ஆரியன் என்னை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என ஸ்ரீதிகா கூறினார்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.