முதன்முதலில் எப்போ பிட்டு படம் பார்த்தீங்க? Anchor’கே ஆட்டம் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே!

Author: Shree
9 September 2023, 9:05 pm

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட ‘Survivor’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறிவிட்டார்.தற்போது பட வாய்ப்புக்காக நிறைய போட்டோஷூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து பட வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

srushti dange - updatenews360

அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்துள்ள படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டு படத்தை குறித்து நிறைய பேச விரும்பிய ஸ்ருஷ்டி டாங்கேவை கோபப்படுத்தி மிரண்டுபோய்விட்டாராம் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்.

முதலில் தமிழ் சினிமாவில் எந்த ஹீரோவுக்கு நீங்கள் Propose செய்ய விரும்புகிறீர் என கேட்டதற்கு, நான் பழகிய எல்லா ஹீரோக்களும் கல்யாணம் ஆனவர்கள் தான் அதனால் அடுத்த கேள்விக்கு செல்லலாம் என்றார். பின்னர் எப்போ, எந்த வயசில் நீங்க முதன் முறையை பிட்டு படம் பார்த்தீங்க என முகம் சுளிக்கும் படி கேட்டுள்ளார் ஆங்கர்.

இந்த கேள்வி கேட்டதும் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற ஸ்ருஷ்டி டாங்கே… என்ன என்ன? என்ன நெனச்சிட்டு இப்படிலாம் கேட்குறீங்க? நான் படத்தின் ப்ரோமோஷனுக்கு தான் வந்திருக்கிறேன். அதை விட்டுவிட்டு தேவையில்லாத, சம்மந்தமே இல்லாத கேள்வியெல்லாம் கேட்டு கடுப்பேத்துறீங்க என கத்திவிட்டு மைக்கை பிடிங்கிப்போட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் அது இயக்குனர் சொல்லி திட்டமிட்டு நடந்த பிராங் தான் என சொல்லி அவரை சமாதானப்படுத்தி நிகழ்ச்சியை தொடர்ந்துள்ளனர். இந்த விஷயம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பரவியது குறிப்பிடத்தக்கது.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!