பலநூறு கோடிகளை ஒரே கையெழுத்தில் இழந்து கடனாளியாகிவிட்டேன் என நடிகை சுதா தெரிவித்துள்ளார்.
நடிகை சுதா தமிழில் குரு சிஷ்யன், வா அருகில் வா, டூயட், 7ஜி ரெயின்போ காலனி, வேதாளம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர். இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது வாழ்வில் சந்தித்த துயரமான அனுபவங்கள் குறித்து கண்ணீருடன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுதா கூறுகையில், பணக்கார குடும்பத்தை சேர்ந்த இவர் குழந்தை பருவத்தில் வசதியாக வளர்ந்ததாகவும், ஆனால் விதி இவர்களை பழிவாங்கிவிட்டது என்றும், தந்தைக்கு புற்று நோய் இருப்பது பற்றித் தெரிந்த பிறகு அனைத்து சொத்துகளும் விற்கபட்டதாம்.
அப்போது இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தன் அம்மா தாலியை விற்று தங்களுக்கு உணவு கொடுத்ததாகவும், சினிமாவில் நுழைந்த பிறகு தனக்குப் பணமும் புகழும் கிடைத்தது.
நடிப்புக்கு பிறகும் ஆனால் மீண்டும், தான் பல கடுமையான இழப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது என்றும், டெல்லியில் ஒரு உணவகத்தை திறந்ததாகவும், அதில் இருந்த பணம் அனைத்தும் தொலைந்துவிட்டது. ஒரே கையெழுத்தில் பலநூறு கோடிகளை இழந்து கடனாளியாகி விட்டதாகவும், ஆனால் தற்போது அதிலிருந்து மீண்டும் வெளிவந்து கொண்டு இருப்பதாகவும், தனது ஒரே மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியேறி விட்டதாகவும், தன்னிடம் தகராறு செய்து சென்றதோடு தன்னுடன் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.
கணவரும் தன்னை பிரிந்துவிட்டதால் தனிமையில் இருப்பதாக என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.