19 வயசு தான் ஆகுது.. அமீர் கானின் ரீல் மகள் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்..!

Author: Vignesh
17 February 2024, 6:06 pm

இந்திய திரையுலகின் நட்சத்திர நடிகரான அமீர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். வயது 58ஐ கடந்தும் அவருக்கான மவுஸ் இன்னுமும் குறைவே இல்லை. ஒவ்வொரு படத்திற்கு அதன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை உருவாக்கிக்கொண்டு நடிப்பில் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அமீர் கான்.

Dangal

2016 ஆம் ஆண்டு அமீர் கானின் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் மல்யுத்த வீராங்கனைகள் கீதா போகத் மற்றும் பபிதா போகத் அவர்களின் வாழ்க்கை மையப்படுத்தி உருவான கதை ஆகும்.

This image has an empty alt attribute; its file name is image-605.png

இதில், பபிதா போகத்தின் இளம் வயது கதாபாத்திரத்தில் சுஹானி பட்னாகர் நடித்திருப்பார். ஹிந்தியில் பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள இவருக்கு, கடந்த ஆண்டு விபத்து ஏற்பட்டு உள்ளது. அந்த விபத்தின் பக்க விளைவுகளின் காரணமாக சுகாசினி உடலில் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்ததாம். இதனால், சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

Dangal

இந்நிலையில், 19 வயதான சுஹானி பட்னாகர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இவரது மறைவு பாலிவுட் திரையுலகை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!