அந்த காட்சியில் நடித்தது ஆபாசமா எனக்கு தெரியல… ரொம்ப அழகா இருந்துச்சு : பகீர் கிளப்பிய 90ஸ் பிரபல நடிகை!!
Author: Vignesh20 January 2023, 10:30 am
நடிகை சுகன்யா 90- களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். நடிகை சுகன்யா 1991 -ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த பொன்வண்ணன் படத்தின் மூலம் அறிமுகமானார்.
பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நடிகை சுகன்யா, விஜயகாந்துடன் சேர்ந்து சின்ன கவுண்டர் படத்தில் நடந்த அனுபவத்தை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில் நடிகை சுகன்யா கூறியதாவது:- ” தான் முதன் முதலில் சின்ன கவுண்டர் படத்தின் மூலம் தான் விஜயகாந்துடன் சேர்ந்து நடித்ததாகவும், விஜயகாந்த் அப்போதே பெரிய மாஸ் ஹீரோ எனவும், அவர் ஒரு நல்ல மனிதர் என்றும், எல்லாரிடமும் இயல்பாகவே பழகுவார்.
சின்ன கவுண்டர் படத்தில் வரும் பம்பரம் காட்சி மிக பிரபலமானது என்றும், இப்படத்தில் இயக்குனர் உதயகுமார் பம்பர காட்சிக்காக தன்னை பம்பரம் விட கற்றுக்கொள்ளும் படி கூறியதாகவும், தானும் இயக்குனர் கூறிவாறு கற்றுக்கொண்டதாகவும், அப்போது தன்னிடம் வயிற்றில் பம்பரம் விடுவதை போன்ற காட்சி ஒன்று இருக்கிறது என படத்தின் இயக்குனர் கூறியதாகவும் தெரிவித்தார்.
தான் அதற்கு ‘இதெல்லாம் அந்த இடத்தில் நடக்குற காரியமா’ என்று கேட்டதாகவும், கடைசியில் வயிற்றில் பம்பரம் விடும் காட்சியை மிக அழகாக இயக்குனர் எடுத்ததாகவும், சின்ன கவுண்டர் படத்தின் இயக்குனர் அதில் ஒன்றும் ஆபாசமாக இருப்பதுபோல் எனக்கொன்றும் தெரியவில்லை” என்று தெரிவித்ததாக நடிகை சுகன்யா பேட்டியில் தெரிவித்துள்ளார்.