நீ பெரிய ஒழுங்கா? அப்போவே லிவிங் டூ கெதர் சுலோக்சனாவை கொச்சைப்படுத்திய ஷகிலா!

Author: Shree
6 July 2023, 4:11 pm

தெலுங்கு சினிமாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை சுலோக்சனா தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். காவியத் தலைவி திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் 1980 இல் சுபோதையம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார். இவர் தூறல் நின்னு போச்சு என்னும் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர். இதுவரை பல மொழிகளில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல பழம்பெரும் இசையமைப்பாரான எம்.எஸ் விஸ்வநாதன் அவர்களின் மகன் கோபிகிருஷ்ணன் அவரை காதலித்து பெற்றோர் சம்மதத்தை மீறி திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் நடிகை சுலொகேஷனா பேட்டி ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது, என் கணவர் அவரது வீட்டில் பல எதிர்ப்புகளை மீறி என்னை தான் திருமணம் செய்துக்கொள்வேன் என அடம்பிடித்து என்னை கரம் பிடித்தார். எங்கள் வீட்டிலும் என் மாமனார் எம்எஸ் விசுவநாதன் வந்து முறைப்படி பெண் கேட்டால் திருமணம் செய்துவைக்கிறோம் என கூறினார்கள். அது நடக்காத காரியம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

எனவே இதெல்லாம் வேளைக்கு ஆகாது என அவர் என்னை திருமணம் செய்துகொள்வதில் குறியாக இருந்தார். அதற்காக திருமணத்திற்கு 1 மாதம் முன்னரே ஒரு வீ டு எடுத்துவிட்டார். அதன் பின்னர் அந்த வீட்டிற்கு என்னை அழைத்துச்சென்று அங்கு தான் திருமணம் ரெஜிஸ்டர் செய்துக்கொண்டோம். அதன் பின் அந்த வீட்டிலேயே எங்கள் வாழ்க்கை துவங்கியது. 3 மாதங்களில் எங்களை மாமனார் எம்எஸ்வி அழைத்துக்கொண்டார். நாங்கள் அங்கு சென்றதும் எங்களை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். பின்னர் ஏதே சில பிரச்சனையால் விவாகரத்து செய்துவிட்டோம். ஆனால், விவாகரத்து பற்றி நான் பேச விரும்பவில்லை. என் கணவர் மிகவும் நல்லவர். நாங்கள் ஒருவரை ஒருவர் ஒருபோதும் குறை சொன்னதில்லை என தன்மையோடு பேசினார்.

இந்த பேட்டி எடுத்த ஷகிலா, நடிகை சுலோக்சனாவை அப்போவே லிவிங் டூ கெதரா ? என ஒரு வார்த்தை இழுத்தபடி கேட்டுள்ளார். அதை பார்த்து நெட்டிசன்ஸ், ஷகிலா நீ ரொம்ப ஒழுங்கா? என விளாசியுள்ளனர். மேலும் சுலோக்சனாவின் குணத்தையும் பாராட்டியுள்ள பலர், கணவர் விட்டு வேறு கல்யாணம் செய்துக்கொண்டபோதும் தனக்கென ஒரு வாழ்க்கையை தேடிக்கொள்ளாமல் இருந்துள்ளார். எவ்வளவு வலி இருந்திருக்கும், ஆனாலும் குறை சொல்லாமல் பேசுவது பிரம்மிக்க வைக்கிறது என கூறி வருகிறார்கள்.

https://www.youtube.com/shorts/LLlx8gtwp2E
  • china decided to ban american movies shocking marvel fans சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?