தத்தி.. பண்ணாட இங்க வா.. பிரபல நடிகையை திட்டி தீர்த்த சிவகுமார்..!
Author: Vignesh25 December 2023, 4:25 pm
சுலக்சனா இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார்.
காவியத் தலைவி திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து சுலக்சனா நடிக்கத் தொடங்கினார். 1980 இல் சுபோதையம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார்.

இவர் தூறல் நின்னு போச்சு என்னும் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர். இவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் ம.சு.விசுவநாதன் மகனான கோபிகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுலக்சனா இன்று நீ நாளை நான், சிந்து பைரவி உள்ளிட்ட 4 படங்களை சிவகுமார் உடன் சேர்ந்து நடித்துள்ளேன். அவர் எப்போதும் என்னை பார்த்தால் தத்தி என்றும் பண்ணாட இங்க வா என்றும் சொல்லமாக திட்டுவார் அது ஏன் என்று எனக்கும் தெரியாது.

ஆனால், மற்ற நடிகர்கள் போல அவர் இல்லை. எப்போதுமே மற்ற நடிகர்கள் நம்மை விட யாரும் அதிகமாக ஸ்கோர் செய்து விடக்கூடாது என்று நடிப்பார்கள். ஆனால், இவர் சரிசமமாக வசனம் எல்லாம் சொல்லிக் கொடுத்து நல்லா நடி என்று ஊக்கப்படுத்துவார் என அந்த பேட்டியில் சிவக்குமார் பற்றி தெரியாத பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.