நடிகை சுனைனா கடத்தல்….உயிருக்கு ஆபத்தா? விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Author: Shree
20 May 2023, 8:39 pm

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுனைனா. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு சுனைனா நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படமே மாபெரும் ஹிட் அடிக்க இப்படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்கா என்ற கானாப் பாடல் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அதன் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து வம்சம், நீர்ப்பறவை, சமர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சுனைனா ரெஜினா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படடத்தின் தயாரிப்பு நிறுவனம் நடிகை சுனைனா கடத்தப்பட்டதாகவும் அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதாகவும் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் சுனைனாவை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என கூற போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர்.

பின்னர் சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் இது குறித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் பேரதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, ரெஜினா படத்தின் ப்ரோமோஷனை வித்யாசமாக செய்ய நினைத்து அவர் கடத்தப்பட்டதாக செய்தி வெளியிட்டோம். ஆனால் அது இவ்வளவு பெரிய விவகாரம் ஆகும் என நினைக்கவில்லை என போலீசாரிடம் அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். படத்திற்காக இப்படியா செய்து? இனிமேல் இதுபோன்று ப்ரோமோஷன் செய்யக்கூடாது என கூறி சென்றுள்ளனர் போலீசார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 554

    0

    0