2000 காலகட்டத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமான குணச்சித்திர நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை ஸ்வர்ணமால்யா. இவர் அலைபாயுதே, எங்கள் அண்ணா,மொழி, அழகு நிலையம், சங்கரன்கோவில், இங்கே என்ன சொல்லுது, புலிவால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தார்.
இதில் குறிப்பாக அலைபாயுதே திரைப்படத்தில் அவர் அறிமுகமானார். அறிமுகப்படமே அவருக்கு மிகச்சிறந்த பெயரையும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதையடுத்து ஜோதிகா நடிப்பில் வெளிவந்த மொழி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது அவருக்கு கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஸ்வர்ணமால்யா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது நான் சிறுவயதில் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கவில்லை. அந்த முடிவை ஒரு நல்ல எண்ணத்தில் என்னுடைய பெற்றோர்கள் எடுத்தார்கள் .
அதனால் நான் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். ஆனால் திருமணம் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. நாங்கள் எதிர்பார்த்தது போல திருமண வாழ்க்கை அமையவில்லை. அதற்காக நான் யாரிடமும் விளக்கம் கொடுக்க தேவையில்லை. அதனால் நேரம் தான் வீணாகும்.. எனக்கு கூறினார்.
மேலும் திரைப்பட அனுபவம் குறித்து கேட்டதற்கு நான் இயக்குனர் மணிரத்தினம் போல் எல்லோரும் நல்லவங்களா இருப்பாங்க அப்படின்னு நினைச்சுட்டேன். அப்படி ஒரு இயக்குனரை நம்பி அந்த மாதிரி ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்து நடித்தேன்.
அந்த படத்தில் பத்து நிமிடங்கள் நடித்த பிறகுதான் நான் எந்த அளவுக்கு முட்டாளாக இருந்திருக்கிறேன் என்பது எனக்கு தெரிய வந்தது. இருந்தாலும் என்னுடைய வாழ்க்கையில் இந்த மாதிரி படங்களில் நடித்ததை விட நான் திருமணம் செய்து தான் மிகப்பெரிய தவறு என நினைக்கிறேன் என இந்த பேட்டியில் ஆதகத்தோடு பேசினார்.