தெத்து பல்லழகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்வேதா ரெட்டி. ரஷ்யாவின் பிரிமோர்ஸ்கி கிராயில் பிறந்த இவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி அதன் பின்னர் சினிமா துறைக்கு வந்தார். இவர் சுப்ரமணியபுரம் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததால் அனைவரது கவனமும் அவரை வெகுவாக ஈர்த்தது.
தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்க துவங்கியது. வடகறி, ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் 2018ல் இவர் மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த விமான ஓட்டி விகாஸ் வாசு என்பவரை காதலித்து மணந்தார். இதனிடையே கடந்த 2020ம் ஆண்டே தனது கணவருடன் எடுத்து வெளியிட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் இருந்து டெலீட் செய்தார்.
இதையடுத்து ஸ்வாதி கணவரை விவாகரத்து செய்யப்போகிறார் என்ற செய்திகள் வெளியானது. அதற்கு அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக ஒரு விளக்கம் கொடுத்தார். ஆனால் மூன்று ஆண்டுகள் கழித்து தனது சமூக வலைதள பக்கங்களில் கணவரின் புகைப்படங்களை ஸ்வேதா ரெட்டி திடீரென டெலீட் செய்தார்.
இதனால் விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்திய பேட்டியொன்றில் விவாகரத்து குறித்து வரும் செய்திகள் குறித்து கேட்டதற்கு பதில் அளித்த ஸ்வாதி ரெட்டி, “சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றும் ஒருவேளை ஏதாவது இருந்தால் நானே அதை சொல்லுவேன் என்று மழுப்பலாக பதிலளித்திருக்கிறார். அவரின் பதிலை வைத்து பார்க்கும் போது நிச்சயம் விவாகரத்து ஆகிவிட்டது போல் தான் தெரிகிறது என நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது விவாகரத்து ஆனது உறுதிப்படுத்தும் வகையில் அவர் நடித்துள்ள மந்த் ஆஃப் மது என்ற திரைப்படத்தை ட்ரைலர் வெளியீட்டு விழாவில், சாய் தரம் தேஜ்ஜை இறுக்கமாக அனைத்து முத்தம் கொடுத்தார். ஸ்வாதி ரெட்டியின் இந்த செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இது மேலும் விவாகரத்து வதந்திகளை தூண்டியுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.