கதவைத் தட்டி அடாவடி செய்த மேனேஜர்.. விஜய் டிவி சீரியல் நடிகை வெளியிட்ட பகீர் சம்பவம்..!

Author: Vignesh
9 January 2024, 10:57 am

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.

suntv serials

ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி. சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தான் கூறுவார்கள். ஆனால் இப்போது அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

suntv serials

இந்நிலையில், சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த சமந்தா கிரண் திருச்சியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். ஏர்லி செக்கிங் வேண்டும் என முன்பே அவர் கேட்டிருந்தாராம். ஆனால், அவர் ஹோட்டல் சென்றபோது அது தொடர்பான பிரச்சனை வந்திருக்கிறது. அதற்கு எக்ஸ்ட்ரா பணம் செலுத்துவது தொடர்பான சண்டைதான் வந்திருக்கிறது.

actress-shyamantha-kiran (1)

அதாவது அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு அவர் செக்கிங் செய்தாராம். அதன் பின் எப்போது காலி செய்வீர்கள் என தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் கால் செய்து கேட்டுக் கொண்டே இருந்தார்களாம். அதன்பின் மறுநாள் காலை 5 மணிக்கு ஹோட்டல் மேனேஜர் வந்து அவர்கள் ரூம் கதவை தட்டி உங்கள் டைம் முடிந்து விட்டது. காலி பண்ணுங்க என பலமுறை பிரச்சனை செய்தார் என தற்போது கோபமாக பேசியுள்ளார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!