தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்துள்ளவர் தபு. இந்தியிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். இவருக்கு 51 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது பிடித்து இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
“திருமணம் செய்துகொள்வது பற்றி சிந்திக்கவில்லை, ஏன் என்றால், நடிகர் அஜய் தேவ்கானுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. இருவரும் 20 வருடங்களுக்கு மேலாக பழகி வந்தோம். என்னுடன் பழகிய நாட்களை அவர் உணர்வார். அஜய் தேவ்கானால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தபு குறித்து பேசி உள்ளார். அதில் அவர் 51 வயதாகியும், இன்னும் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் தபு சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே, தபுவின் அப்பா வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். அந்த பெண்ணை இரண்டாம் திருமணமும் செய்து கொண்டார். தபுவின் அப்பா மகள் மற்றும் மனைவி முன்பு இரண்டாம் மனைவியுடன் ஜோடியாக சுற்றுவார். அவர்களை வெறுப்பேற்றுவதற்காக அவ்வாறு நடந்து கொள்வார்.
இதனால், தபுவின் கண்களுக்கு அவருடைய அப்பா சைக்கோ போல் தெரிந்தார், மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மும்பைக்கு குடியேறினார்கள். தபுவின் சகோதரி சீரியலில் நடிக்க ஆரம்பிக்கிறார். அதன் பின்பு தபுவுக்கும் திரைப்பட வாய்ப்பு வந்தது என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.