அஜித்தை அடைய துடித்த நடிகைகள்… பங்களா வீட்டில் அந்த நடிகையுடன் தனிமையில் வாழ்ந்தாரா?

Author: Shree
16 June 2023, 4:59 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.

முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அஜித் தொடர்ந்து டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். ஷாலினி அஜித்தை ஆரம்ப காலத்தில் பார்த்து பழகியது போல் இன்றும் காதலித்து வருகிறார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் அஜித்தை பல்வேறு நடிகைகள் அடைய நினைத்ததாக கூறியுள்ளார்.

ஒரு முறை அன்றைய காலத்தில் டாப் ஹீரோயினாக இருந்த பிரபல நடிகையுடன் அஜித் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்ததாகவும் அவருடன் பங்காவில் தனியாக வசித்து வந்ததாகவும் செய்திகள் வெளியானது. இதுகுறித்து அஜித்திடம் அன்றைய பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, என்னுடைய பர்சனல் விஷயம் அது. அதற்கெல்லாம் பதில் சொல்லமுடியாது என கூறினாராம்.

மேலும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை தபு அஜித்தை வச்ச கண்ணு வாங்காமல் பார்த்து ரசித்ததாக அதனை தான் நேரடியாகவே பார்த்து பத்திரிக்கையில் எழுதி செய்தியாக வெளியிட்டதாக பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார் செய்யாறு பாலு.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி