உங்க அசிஸ்டன்ட்ஸ்க்கும் நாங்க சம்பளம் தரணுமா? தயாரிப்பாளருக்கு ஆதவாய் கை கொடுத்த பிரபல நடிகை

Author: Sudha
24 July 2024, 12:46 pm

தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார் நடிகை கிருதி சனோன்

சில பாலிவுட் நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள். அது போதாது என்று அவர்களுடன் வரும் அசிஸ்டன்ட்ஸ் அனைவருக்கும் தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்க வேண்டியதாய் இருக்கிறது. இது மிகவும் வியப்பாக உள்ளது. ஒரு சில பாலிவுட் நடிகர்கள் அவர்களுடன் வரும் சமையல்காரருக்கும் சேர்த்து தயாரிப்பாளரிடம் சம்பளம் கொடுக்கச் சொல்கிறார்கள் என மனம் நொந்து பேசியிருந்தார்.

இதே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை மஞ்சு லக்ஷ்மி. ஹாலிவுட் நடிகர் நடிகைகள் அவர்களது வேலையை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். நம் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய அசிஸ்டன்டஸ் இருக்கிறார்கள் அவர்களது சேரை எடுத்து போடுவதற்குக் கூட ஒரு அசிஸ்டன்ட் தேவைப்படுகிறார்.

ஹாலிவுட் திரைப்படங்களில் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் இருப்பார் ஆனால் இங்கு டச்அப் மேன், மேக்கப், ஹேர் ஸ்டைலிஸ்ட் என பலரையும் உடன் வைத்துக் கொள்கிறார்கள் அதற்கும் சேர்த்து தயாரிப்பாளர் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது எனச் சொல்லியிருக்கிறார்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்