கேரவனில் தமன்னாவுக்கு அப்படி..? கண்ணாடியைப் பார்த்த அந்த நொடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Author: Hariharasudhan6 February 2025, 12:24 pm
கேரவனில் தனக்கு நேர்ந்த அந்தச் செயலால் தான் மிகவும் மனமுடைந்துவிட்டதாக நடிகை தமன்னா கூறியது பேசுபொருளாக மாறியுள்ளது.
சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது, அவ்வப்போது பாலிவுட்டிலும் தலையைக் காட்டி வருபவர் நடிகை தமன்னா. இந்த நிலையில், இவர் சமீபத்தில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை பங்கேற்றார். அப்போது, அவர் பேசிய வார்த்தைகள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மேலும், இது தொடர்பாக பேசிய தமன்னா, “நான் என்னுடைய கேரவனில் இருக்கும்போது, எனக்கு பிடிக்காத ஒன்று நடந்தது. எனவே, அதனால் நான் மிகவும் மனம் உடைந்தேன். இதனால் என் கண்கள் குளமாகின. அந்த நேரத்தில் எனக்கு படப்பிடிப்பும் இருந்தது.
அதனால் என்னால் அந்த இடத்தில் அழ முடியவில்லை, அது முடியவும் முடியாது. அப்போது நான், என்னிடம் இது ஒரு உணர்ச்சி மட்டும் தான், அதை நான் கட்டுப்படுத்த வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பின்னர் இந்தக் கடினமான உணர்ச்சியை மகிழ்ச்சியாக நான் மாற்றிக் கொண்டேன். இது எனக்கு பெரிதும் உதவியது” எனக் கூறியுள்ளார்.

இருப்பினும், கேரவனில் என்ன விரும்பத்தகாத செயல் நடந்தது என்று தமன்னா கூறவில்லை. மேலும், இந்தச் சம்பவத்தின் போது கண்ணாடியில் என்னை நானே பார்த்துக்கொண்டு தேற்றிக் கொண்டேன் எனவும் தமன்னா கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: விடாமுயற்சி படத்தில் அஜித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரெஜினாக்கு டிமாண்ட்!
இதனிடையே, ஒடேலா 2 என்ற படத்தில் தமன்னா நடித்துள்ளார். சிவன் பக்தையாக நடித்துள்ள இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வருகிறது. மேலும், ஸ்ட்ரீ 2 திரைப்படம், இந்தியில் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. அது மட்டுமல்லாமல், சிகந்த கா முகாதர் என்ற படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக, அரண்மனை 4 மற்றும் ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடலில் தமிழ் சினிமாவில் சமீபத்தில் நடித்திருந்தார்.