தனது வருங்கால கணவரை அறிமுகம் செய்து வைத்த தமன்னா.. அவரே வெளியிட்ட புகைப்படம்…. வைரலாக்கும் ரசிகர்கள்..!

Author: Vignesh
17 November 2022, 10:15 am

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் தமன்னா. மும்பையை சேர்ந்த இவருக்கு தென்னிந்திய மொழி சினிமாவில் இருந்து தான் பட வாய்ப்புகள் குவிந்தது. பிரபல நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள தமன்னா இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில் இவரின் திருமணம் குறித்து இணையத்தில் செய்திகள் பரவி வந்தது.

Tamannaah-1 - updatenews360

30 வயதை கடந்த நடிகை தமன்னாவின் திருமணம் குறித்து அவ்வப்போது இணையத்தில் வதந்திகள் பரவுவது வழக்கம். தனது திருமணம் குறித்து இணையத்தில் செய்திகள் பரவும் போதெல்லாம், அதைப்பற்றி தான் யோசிக்கவில்லை என்றும், அதற்கான காலம் வரும் போது, பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வேன் என கூறி வந்தார்.

Tamannaah-1 - updatenews360

இந்நிலையில் தற்போது தமன்னா மும்பையை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக இணையத்தில் தீயாய் செய்திகள் பரவி வருகிறது. விரைவில் இந்த தகவலை தமன்னா வெளிப்படையாக அறிவிப்பார் என்றும் கூறப்பட்டது.

Tamannaah-1 - updatenews360

இந்நிலையில் இந்த தகவலை வதந்தி என்று மறுப்பு தெரிவித்துள்ளார் தமன்னா. இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “என் தொழிலதிபர் கணவரை அறிமுகப்படுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டு ஆண் போல் உடையணிந்துள்ள தனது வீடியோவை பகிர்ந்து தன்னைப்பற்றிய திருமண தகவல்களை கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Tamannaah -updatenews360

அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமன்னா தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ‘போலா ஷங்கர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ படத்தின் ரீமேக் ஆகும். மேலும் இந்தியில் தமன்னா நடிப்பில் ‘போலே சூடியன்’ மற்றும் மலையாளத்தில் ‘பாந்த்ரா’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 459

    0

    0