பிரபல நடிகரை காதலிக்கும் தமன்னா?.. பார்ட்டியில் லிப்லாக் : காட்டுத்தீ போல் பரவும் வீடியோ..!
Author: Vignesh3 January 2023, 11:15 am
சினிமாவில் பல நடிகர் நடிகைகள் பலர் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் அந்த பிரச்சனையில் இருந்து வெளியேறிய மீண்டும் தனக்கென ஒரு அடையாளத்தை பிடித்துக் கொள்கின்றர். ஒரு சிலர் அதனால் அப்படியே சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியேறுகின்றனர்.
அந்த வகையில் தென்னிந்தியாவில் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிய நடிகைகளில் ஒருவர் தமன்னா. தமன்னா தமிழை தாண்டி இந்தி, மலையாளம், தெலுங்கு என திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இவருக்கு தற்பொழுது 30 வயது ஆனாலும், தன்னுடைய மார்க்கெட் குறையாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள்.
இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.
இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது தமன்னா ஒருவரை காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் புத்தாண்டின் போது தமன்னா கோவாவில் பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவுடன் பிங்க் நிற ஆடையில் கலந்து கொண்டிருந்தார்.
பார்ட்டியில் புத்தாண்டு பிறந்த போது அனைவரும் ஜோடியாக நடனமாடி இருக்கின்றனர். அப்போது வாணவேடிக்கையோடு நடிகர் விஜய் வர்மா தமன்னாவிற்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Tamannaah Bhatia and Vijay Varma KISS pic.twitter.com/8c7ADDMEzE
— bunny (@bunnyAmnansh) January 2, 2023