நடிகர் விஜய்யுடன் தமன்னாவுக்கு திருமணம்: அதுவும் இந்த ஆண்டா? அந்த வீடியோ உண்மை தானா?

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 12:00 pm

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

Tamannaah -updatenews360

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.

சமீபத்தில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் ஆங்கில புத்தாண்டு பார்ட்டியில் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், நடிகை தமன்னா நடிகர் விஜய் வர்மாவை இந்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 709

    0

    1