ஐயோ!! வேணாம் தாயே….. சொன்னா கேளு…. “அனிமல்” இயக்குனரின் படத்தில் அந்த ரோலில் திரிஷா!

Author:
23 August 2024, 5:37 pm

பாலிவுட் திரைப்படத்துறையில் பிரபல இயக்குனரான சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியான திரைப்படம் தான் அனிமல். இந்த திரைப்படத்தில் பாபி தியோல் , விவேக் ஓப்ராய், அனில் கபூர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

தந்தை மகன் உறவைப் பற்றி பேசும் இந்த படம் மிகவும் மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகியது. மேலும் வசூரில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தாலும் பெருவாரியான மக்களால் இந்த திரைப்படம் மோசமாக விமர்சிக்கப்பட்டது. ஆணாதிக்கம் நிறைந்த கருத்துக்களைக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த இந்த படம் ஒரு டாக்ஸிக் படம் என விமர்சகர்கள் மோசமாக கருத்து கூறினார்கள்.

மேலும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கவே கூடாது என தென்னிந்திய ரசிகர்கள் அவரை திட்டினார்கள். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் அனிமல் படத்தை தொடர்ந்து இயக்குனர் சந்திப் ரெட்டி வங்கா இயக்கப்போகும் புதிய படத்தில் நடிகை திரிஷா கமிட் ஆக்கி இருக்கிறாராம்.

இதுவே த்ரிஷாவின் தெனிந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஆனால் இன்னொரு அதிர்ச்சிக்குரிய தகவல் என்னவென்றால்… இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா வில்லி வேடத்தை ஏற்று நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

trisha - updatenews360 1

இதை கேள்விப்பட்ட திரிஷாவின் ரசிகர்கள் ஐயோ அம்மா.. தாயே…அப்படி மட்டும் பண்ணிடாதே. சொன்னா கேளு என அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள். ஏனென்றால் சந்தீப் ரெட்டி வாங்க படத்தில் நடிப்பதே பெரிய ரிஸ்க் இதுல திரிஷா வில்லி ரோலில் வேற நடிக்கிறாரா? என்ன கொடுமை சார் இது என பலரும் திட்டி தீர்த்து அவரை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி வருகிறார்கள். ஆனால் திரிஷா ஒரே முடிவோடு தான் இருக்கிறாராம்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?