எவர்கிரீன் அழகி திரிஷா…41 வயசாகியும் குறையாத அழகு – இளமையின் ரகசியம்!

Author:
13 August 2024, 1:13 pm

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான திரிஷா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகை ஆவதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு “மிஸ் சென்னை” போட்டியில் பட்டம் பெற்றிருக்கிறார். அதன் பிறகு திரிஷாவுக்கு திரைப்படங்களில் இருந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்க துவங்கியது.

trisha - updatenews360 1

ஜோடி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் ஏற்று திரிஷா நடித்திருந்தார். அதை அடுத்து மௌனம் பேசியதே, சாமி, அலை, கில்லி, ஆயுத எழுத்து, ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் திரிஷா.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரம் நடித்து எல்லோரும். ரசனைக்கும் உள்ளாகி இருந்தார். இதனிடையே பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் திரிஷாவின் அழகின் ரகசியம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி பெண்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

41 வயதாகும் திரிஷா இதுநாள் வரை இளமை குறையாமல் எவர்க்ரீன் அழகியாக வலம் வந்து கொண்டிருப்பதன் ரகசியம் என்னவென்று கேட்டீர்களானால் நடிகை திரிஷா தினமும் டயட் மற்றும் வொர்க் அவுட்டை தவறாமல் கடைபிடிப்பவர். மேலும் திரிஷா சிறுவயதிலிருந்தே அசைவ உணவுகளை அறவே தவிர்த்து வந்தாராம் .

trisha - updatenews360 1

அதிக காய்கறிகளை தன் உணவில் சேர்த்துக் கொள்வார். பொதுவெளியில் எங்குமே சாப்பிட மாட்டாராம் தன்னுடைய அம்மாவின் கைகளால் சமைக்கப்படும் உணவு மட்டுமே த்ரிஷா அதிகம் சாப்பிடுவார். மேலும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் தன்னுடைய சருமங்களை பாதுகாக்கவும் எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவே கூடாது என்பதில் கவனமாக இருப்பாராம்.

மேலும், மன அமைதிக்காக திரிஷா யோகா மற்றும் மெடிடேஷன் போன்றவற்றில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இத்துடன் முகம் பொலிவுடன் அழகாக இருப்பதற்காக விட்டமின் சி நிறைந்த பழங்களை ஜூஸாகவோ அல்லது பழங்களாகவோ எடுத்துக் கொள்வாராம். இதுதான் திரிஷா அழகன் ரகசியம் என கூறப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 244

    0

    0