பக்கத்து வீட்டுகாரருடன் குடுமிப்பிடி சண்டை போட்ட திரிஷா – கோர்ட் படி ஏறிய பிரச்சனை!

Author:
25 September 2024, 7:41 pm

நடிகை திரிஷா வயது 41 ஆகியும் கூட தனது இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது விஜய் நடிப்பில் வெளிவந்திருக்கும் கோட் திரைப்படத்தில் மட்ட என்கிற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருந்தார்.

Trisha

இது தவிர அவர் “விடாமுயற்சி” திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படியாக திரிஷா தொடர்ச்சியாக மார்க்கெட்டை பிசியாக வைத்திருக்கும் சமயத்தில் திரிஷா குறித்த ஒரு செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் திரிஷா சென்னையில் Cenotaph Roadல் வசித்து வருகிறார். அங்கு பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் திரிஷா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது இரண்டு வீட்டுக்கும் பொதுவான மதில் சுவரை இடித்துவிட்டு பக்கத்து வீட்டுக்காரர் மாற்றி கட்ட முயற்சிப்பதாக நடிகை திரிஷா வழக்கு தொடர்ந்து இருந்தார் .

trisha - updatenews360 1

இதையும் படியுங்கள்: தொலைக்காட்சிக்கு வந்த விஜய் ஆண்டனி – முழு விவரம் இதோ!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இவர்களின் இரண்டு தரப்பும் தற்போது பேசி சமரசம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள். இதனால் இந்த வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. திரிஷா பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை போட்ட விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி