எப்போதும் அந்த மாதிரியான உணவுதான்: ஜாதி பெயரை கூறிய த்ரிஷா.. சர்ச்சையாக்கும் நெட்டிசன்கள்..!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 9:00 pm

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

trisha krishnan - updatenews360

சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

trisha krishnan - updatenews360

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் த்ரிஷா பேசும்போது அவருக்கு பிடித்த உணவுகள் பற்றி கேட்கப்பட்டது, அதற்கு பதில் சொன்ன அவர் “எப்போதும் பிராமின் சவுத் இந்தியன் உணவு என்றால் அது என் வீட்டில் தான் பிடிக்கும், நார்த் இந்தியன் என்றால் ரெஸ்டாரண்டில் இருந்து ஆர்டர் செய்வேன். சைனிஸ், தாய் என பல வித உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவேன் என கூறி இருக்கிறார்.

உணவு பற்றி கேட்டால் தனது ஜாதியை பற்றி குறிப்பிட்டு பேசி இருக்கும் த்ரிஷாவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து இருக்கின்றனர். அதே நேரத்தில் த்ரிஷாவுக்கு ஆதரவாகவும் பலர் கமெண்டில் பேசி வருகின்றனர்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்