‘தலைவி கம்பேக் கொடுத்தா.. சிலருக்கு வேலை இருக்காது’ நடிகையை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

Author: Rajesh
2 February 2023, 1:05 pm

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய திரையுலகில் Top 3யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

இப்படி தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்திருக்கிறார். 39 வயதாகும் இவர் இன்னும் அதே இளமையோடு தான் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ராங்கி திரைப்படம் வெளியானது. தற்போது, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் – 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதை தவிர, ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார். மேலும், 14 வருட இடைவெளிக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தளபதி67 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவுள்ளார்.

Trisha_Updatenews360

அதற்கான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் சமூகவலைத்தளங்கள் முழுவதும் த்ரிஷா – விஜய் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதனால் திரிஷா ரசிகர்களோ, “நான் தான் சொன்னேன்ல.. என் தலைவி கம்பேக் கொடுத்தா இங்க சில பேருக்கு வேலை இருக்காது” என நயன்தாராவை மறைமுகமாக சாடி மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ