திரிஷாவின் காதல் பதிவு: ஜப்பானில் வைரலாகும் தகவல்!

Author: kumar
22 November 2024, 4:19 pm

திரிஷாவின் காதல் பதிவு: ஜப்பானில் இருந்து வைரலாகும் தகவல்!

நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்த தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் “சவுத் குயின்” என அழைக்கப்படும் திரிஷா, சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் முன்னணி இடத்தை பிடித்தார். அந்தப் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா, தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

Trisha viral photo trending

விஜய்யுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி, சிம்புவுடன் தக் லைஃப் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், வெளிநாடுகளுக்கு தனது நண்பர்களுடன் அடிக்கடி பயணிக்கிறார்.

மேலும் படிக்க: பிகிலை கைதி கதறவிட்டதா? ப்ளூ சட்டை மாறன் கருத்து!

சமீபத்தில் ஜப்பான் சென்றுள்ள திரிஷா, அங்கே எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, “30 ஆண்டுகளாகி விட்டது. அப்போ எவ்வளவு லவ் பண்ணேனோ, இப்போ இன்னும் அதிகமா லவ் பண்றேன். நீ ஒரு வைஃப் ஜப்பான்” என பதிவிட்டார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ரசிகர்கள் அவரின் அழகை பாராட்டியும், வயதிற்கு இடமின்றி அவரது இளமைதன்மை குறித்து கேள்வி எழுப்பியும் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.

  • D Imman latest interview என் போனை கொடுக்குறேன்..செக் பண்ணி பாத்துக்கோங்க…டி.இமான் ஓபன் டாக்.!