பிரபல நடிகையிடம் அந்தரங்க பாகத்தை காட்டி மார்க் போட சொன்ன பிக்பாஸ் போட்டியாளர்: வலுக்கும் எதிர்ப்பு..!

Author: Vignesh
12 October 2022, 5:15 pm

இந்தியா முழுவதும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் முதன்முதலில் இந்தி மொழியில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதனை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 16 சீசன் நடைபெற்று வருகிறது.

திரைப்பட இயக்குனர் சஜித் கான் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் இயக்குனர் சஜித் கான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை நிகழ்ச்சியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

sajid khan_updatenews360.jpg 2

இயக்குனர் சஜித் கான் மீது Mee Too இயக்கத்தின்போது, பல்வேறு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், டெல்லி பெண்கள் ஆணையம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், பிரபல இந்தி நடிகையும், மாடலுமான ஷெர்லின் சோப்ரா, பிக்பாஸ் தொடரில் இருந்து இயக்குநர் சஜித் கானை வெளியேற்றுமாறு அதிரடி குற்றச்சாட்டு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Mee Too இயக்கத்தித் சஜித் கான் மீது புகார் அளித்த 10 பெண்களில், ஷெர்லினும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

sajid khan_updatenews360.jpg 2

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”என் முன்னால், சஜித் கான் தனது அந்தரங்க பாகத்தை காட்டி, இதற்கு 0 – 10 வரை மதிப்பெண் போடச் சொல்லி சொன்னார்.

தற்போது, அந்த பிக்பாஸ் வீட்டில் புகுந்து மதிப்பெண் போடலாம் என்று இருக்கிறேன். பாலியல் தொல்லைக் கொடுத்தவரிடம், பாதிக்கப்பட்டவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை பார்ப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘இந்த விவகாரத்தில் நீங்கள் யார் பக்கம் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்’ என நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற முறையில் சல்மான் கானையும் ஷெர்லின் சோப்ரா டேக் செய்துள்ளார்.

Sherlyn-Chopra_updatenews360

அத்துடன் இது தொடர்பாக ஷெர்லின் சோப்ரா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் இணைப்பையும் அந்த பதிவுடன் இணைத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!