எப்பவும் போதையிலேயே இருந்தா மனுஷன் வாழ முடியுமா? மறுமணம் செய்து கொண்ட ஊர்வசியின் முதல் கணவர்..!

Author: Vignesh
4 August 2023, 10:45 am

சினிமாவில் பிரபலமாக உள்ளவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சிலருக்கு நன்றாக அமைவதில்லை, ஒரு சிலர் தனிப்பட்ட வாழ்க்கையை வெறுத்து தனித்தே வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தன்னுடைய குடி பழக்கத்தால் கணவரை விவாகரத்து செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு தனிமையே வாழ்க்கை என வாழ்ந்து வருகிறார் பிரபல நடிகை.

urvashi - updatenews360

FLASHBACK

நடிகை ஊர்வசி, சினிமாவில் நடிப்பதை விரும்பாதவர், 9ஆம் வகுப்பு படிக்கும் போது தனது சகோதரி கல்பனாவுடன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது முந்தானை முடிச்சு படத்தின் போது பாக்யராஜ் அவர்கள் ஊர்வசியை தேர்வு செய்து சம்மதம் வாங்கி நடிக்க வைத்தனர். வேறு வழியில்லாமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டவர் தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார்.

அவர் மலையான நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2001 ஆம் ஆண்டு இவர்களுக்கு மகள் பிறந்தது. அதன் பின்னர் 2008ஆம் ஆண்டே இருவருக்கும் விவாகரத்தானது. திருமணத்திற்கு முன் மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருந்த ஊர்வசி, திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபத்தில் இருவருக்கும் தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மனோஜ், அவரோடு வாழமுடியாது என்று முடிவெடுத்து விவாகரத்துக்கு சென்றார். அதுமட்டுமில்லாமல் தன் மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கையிட்டுள்ளார். எப்போது ஊர்வசி மதுபோதையில் இருப்பதால் அப்படி கேட்ட மனோஜிடமே மகளை ஒப்படைத்தனர்.

விவாகரத்துக்கான காரணத்தை கேட்ட போது, ஊர்வசி மது பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார் என கணவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

urvashi - updatenews360

இது குறித்து அப்போது பேசிய ஊர்வசி, மனோஜ் கே ஜெயன் மற்றும் அவரது குடும்பத்தார் கூட்டாக அமர்ந்து மது அருந்துவார்கள். அவர்களால் தான் எனக்கும் மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது என பகீர் குற்றச்சாட்டையும் வைத்தார்.

இதன் பின் 2013ஆம் ஆண்டு சென்னை பொறியாளரை திருமணம் செய்தார். அவர்களுக்கு 2014ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். தற்போது வரை அவர் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என 600 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதன்பின் மது பழக்கத்தை விட்டும் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை உருவாக்கினார் நடிகை ஊர்வசி.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 657

    1

    1