மரியாதை கிடைக்கல.. யாருக்கும் தெரியாத விஷயத்தை கண்ணீருடன் பகிர்ந்த ஊர்வசி..!

Author: Vignesh
27 June 2024, 5:19 pm

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கிய ஊர்வசி இன்னும் அனைத்து மொழிகளிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் பிசியாக நடித்த வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில், கலந்து கொண்ட ஊர்வசி தனது அக்கா கல்பனா குறித்த சோகமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

urvashi

அதில், எனது அக்கா கல்பனாவிற்கு வந்தப்பட வாய்ப்புகளில் நான் நடித்தேன். இதனால், அவர் என் மீது கோபப்பட்டதே கிடையாது. மாறாக வளர்ச்சியை பார்த்து மகிழ்ந்தார். மலையாளம் மற்றும் தமிழ் சினிமா இரண்டுமே அக்காவுக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை. இதனால் பல பட விழாக்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தேன். அக்கா என்னைவிட திறமைசாலி, அவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். அக்காவுடன் நான் சென்றால், எனக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுவார்கள் என்று நினைத்து பட விழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தேன் என சோகத்தையும் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!