நீச்சல் உடை புகைப்படத்தை வைத்து விளம்பரம் தேடிய தயாரிப்பாளர்: கெஞ்சி கேட்ட 54 வயது நடிகை..!

Author: Rajesh
5 March 2023, 8:00 pm

80ஸ்களில் தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஊர்வசி. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான “முந்தானை முடிச்சு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது நிறைய குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர், இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளியான “அம்பிகை நேரில் வந்தாள்” என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் மோகன், ராதா என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஊர்வசி நீச்சல் உடையில் நடிப்பது போன்ற காட்சியை எடுக்கப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அந்த காலத்தில் நடிகைகள் இது போன்ற காட்சிகளில் நடிப்பது மிகவும் அரிது. ஆனால் ஊர்வசி துணிச்சலாக அந்த காட்சியில் நீச்சல் உடையில் நடித்திருந்தார்.

அந்த காட்சி படமாக்கப்பட்ட பிறகு, ஊர்வசி இப்படத்தின் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம், “என்னுடைய நீச்சல் புகைப்படத்தை வைத்து விளம்பரம் செய்யாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சீதா ராமன் கூறியுள்ளார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!