பாம்பு கறி சாப்பிட கொடுத்த கமல்ஹாசன்… ஷூட்டிங்கில் அலறியடித்து ஓடிய பிரபல நடிகை!

Author: Rajesh
25 February 2024, 11:39 am

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.

குழந்தை பருவத்தில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வரும் கமல் ஹாசன் இன்று உலக நாயகனாக பெயரெடுத்துள்ளார். 69 வயசிலும் ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகராக டாப் இடத்திலே இருந்து வருகிறார். திரைப்படம், அரசியல், தொகுப்பாளர் என துறைகளில் பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கமல் ஹாசன் குறித்து பிரபல நடிகை ஊர்வசி பேட்டி ஒன்றில், நான் அசைவ உணவுகள் சாப்பிடாத ஆள். ஷூட்டிங் சமயத்தில் சக கலைஞர்கள் பறப்பன , நடப்பன , ஊர்வன என அனைத்து வகையான அசைவ உணவுகளையும் வெளுத்து வாங்குவார்கள். நான் தனியாக சாப்பிடுவேன். அப்படி ஒரு முறை கமல் ஹாசன் ஷூட்டிங் ஸ்பாட்டில், ஏதோ வட்ட வட்டமாக ஒரு பிளேட்டில் வைத்து சாப்பிடக்கொடுத்து இன்னைக்கு இதுதான் ஸ்பெஷல் ரோஸ்ட் என்றார்.

அது பார்க்க கொஞ்சம் வித்யாசமாக இருந்ததால் நான் உடனே வாங்கி பார்த்தேன்.. அது என்ன என்று அப்போது எனக்கு தெரியவில்லை… அதன் பின் அருகில் அமர்ந்திருந்த நடிகை அனுராதா அது பாம்பு கறி சாப்பிடாத என்று கூறினார். உடனே நான் பதறிப்போய் அலறியடித்து அப்பால் ஓடிவிட்டேன். விஷயம் அறிந்த கமல் அங்கு வந்து என்ன ஏது என்று கேட்டார். அனுராதா இப்படி சொல்லிவிட்டார் என நான் சொன்னதும் நீங்கள் சும்மா இருக்க மாட்டீங்களா..? அதையெல்லாம் எதுக்கு சொல்லிட்டு இருக்கீங்க.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்கள் சாப்பிடுங்க என்று கிண்டல் அடித்தார் கமல்ஹாசன். ஒரு வேளை அது நிஜமாவே பாம்பு கறியோ என பயந்திருந்தேன். பின்னர் தான் தெரியவந்தது அது கணவாய் மீன் என்று என கூறினார் ஊர்வசி.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ