என் கணவரால் ஒரே ராத்திரியில் நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன் – பிரபல நடிகை குமுறல்!

Author: Shree
20 May 2023, 9:56 pm

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் சுமார் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார். அத்துடன் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். 1979ல் வெளியான கன்னிப் பருவத்திலே என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இப்படத்தில் வடிவுக்கரசி நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். பின்னர் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவுக்கரசி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். குறிப்பாக ரஜினியின் அருணாச்சலம் திரைப்படத்தில் கிழவியாக நடித்து மிரட்டினார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயண அனுபவங்களை குறித்தும் வாழ்க்கையில் நடந்த பல சோகமான சம்பவங்களை குறித்து பேசிய வடிவுக்கரசி, ” ஆசிரியராக நான் முதலில் எனது பயணத்தை தொடங்கினேன். ஆனால் அதில் சம்பளம் பத்தாதால் துணிக்கடையில் வேலை, கீப்பிங் வேலை என செய்துவந்தேன்.

பின்னர் நியூஸ் பேப்பரில் நடிக்க விளம்பர வந்தது. நான் கருமையாக இருந்ததால் ஹீரோயின் தோற்றமெல்லாம் எனக்கு கிடைக்காது. எனவே தான் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்தேன். என் அப்பா , சித்தப்பா சினிமா துறையில் இருந்தார்கள். அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் நாங்கள் ஒரே ராத்திரியில் நடு தெருவுக்கு வந்துவிட்டோம். மேலும் நான், என் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை பிரிந்து நடிக்க சென்றேன். அந்த சமயத்தில் என் அம்மா தான் என் மகளை வளர்த்தார் என வருத்தத்துடன் கூறினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1058

    3

    2