அந்த விஷயத்தில் கஞ்சத்தனம்… அதனால் தான் அந்த எண்ணம் வரவில்லை.. வாணி போஜன் OpenTalk..!

Author: Vignesh
17 April 2024, 11:19 am

சீரியல் நடிகையாக மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

vani bhojan-updatenews360

மேலும் படிக்க: மகளுக்கு நடந்த 2-ம் கல்யாணம்.. தாலி கட்டும்போது எமோஷனலான சங்கர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த படத்திற்கு பின்னர் பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில், என்ன கார் வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு நான் அந்த விஷயத்தின் மிகவும் கஞ்சம். தேவையில்லாத செலவுகளை தவிர்த்து விடுவேன் என்றும், எது முக்கியம் என்று பார்த்து பார்த்து செலவு செய்வேன் என்றும், தெரிவித்துள்ளார்.

vani bhojan-updatenews360

மேலும் படிக்க: ஜோவிகா எனக்கு பொறக்கல.. உண்மையான அப்பா அவர் தான்.. அதிரவைத்த வனிதாவின் Ex கணவர்..!

மேலும், தெய்வ மகள் சீரியலில் நடிக்கும் போது ஒரு காரை வாங்கினேன். அதைத்தான் நான் இப்போது வரைக்கும் வைத்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், அந்த காரை மாற்ற எனக்கு தோணவில்லை. அதற்கு காரணம் எனக்கு மிகவும் லக்கியான காராகவும், இதுவரை எந்த விபத்தும் நடக்காமல் இருப்பதும் என் லக்கி காராக மாறிவிட்டது. இப்போது, வரைக்கும் எனக்கு கார் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?