“எல்லாம் வேஸ்ட்”.. வனிதா திருமணம் குறித்து விரக்தியில் மகள் எடுத்த முடிவு..!
Author: Vignesh17 March 2023, 10:37 am
வனிதா பற்றி நாம் அனைவருக்குமே தெரிந்ததே. சர்ச்சைக்கு பெயர் போன வனிதா, ஆரம்பத்தில் இருந்தே தனது தந்தையுடனும் தாயுடனும் மோதல் போக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.
3 திருமணங்கள் செய்த வனிதா அனைவருடனும் வாழப் பிடிக்காமல் விவாகரத்து செய்து விட்டார்.
நடிகை வனிதா பிக் பாஸுக்கு பிறகு தனியாக youtube சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். அவர் சமையல், மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி வீடியோ வெளியிட்டு வருகிறார் அவர். அவற்றுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
மேலும் சீரியல்கள், படங்கள் என நடிகையாகவும் தொடர்ந்த பிசியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சர்ச்சை நாயகியாக பெயர் வாங்கி வந்த வனிதா இப்பொழுது எந்த பிரச்சனையும் இல்லாமல் தனது கெரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
வனிதா கிட்டத்தட்ட 10 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது, தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசினார்.
அப்போது தொகுப்பாளர் வனிதாவிடம், ” உங்கள் மகள் கூறும் அறிவுரைகளை நீங்கள் கேட்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த வனிதா, “தன் மகள் நகைச்சுவையாக ஒருமுறை தன்னிடம், நீங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்வது தான் நல்லது. இந்த ஆண்கள் எல்லாம் வேஸ்ட்” என்று சொன்னதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.