அந்த வெறியோடு இருந்த வனிதா.. அக்காவை கண்டமேனிக்கு திட்டிய சம்பவம்..!

தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறைகளாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் மறைந்த மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் தான் நடிகை வனிதா. இவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார். பின்பு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் இருந்த நிலையில் அவரைப் பிரிந்தார்.

மேலும் படிக்க: விஜய்யின் Goat பட Climax-ல் கேமியோ ரோலில் பிரபல ஹீரோ.. அட இவரா? வந்தா நல்லா இருக்குமே..!

இதனிடையே, வனிதா இரண்டாம் முறையாக ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். இதில், முதல் கணவரிடம் ஆகாசும் மகள் வனிதா உடன் மற்றொரு மகளும் அவரது முன்னாள் கணவரிடம் மற்றொரு மகளும் இருந்து வருகின்றனர்.

மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு சில மாதங்களில் விவாகரத்தும் பெற்றுக் கொண்டார். இதனிடையே பீட்டர் பால் உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா நடன கலைஞர் ஆன சுந்தரம் மாஸ்டரின் வாரிசான பிரபுதேவா குறித்து பேசி உள்ளார். அதில் தான் பிரபுதேவாவை வெறித்தனமாக ஒரு சமயத்தில் காதலித்ததாகவும், காதலன் படம் வெளிவந்த போது அவருடைய புகைப்படங்களை சேகரித்து வைத்துக் கொண்டாராம்.

மேலும் படிக்க: எந்த பிரயோஜனமும் இல்லை.. புஷ்பா படம் குறித்து அந்த நடிகரே இப்படி சொல்லிட்டாரே..!

தன்னுடைய அப்பா ஒரு முறை பிரபுதேவாவை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், அப்போது தான் அவருக்காக விதவிதமான பல அசைவ உணவுகளை சமைத்துக் கொடுத்ததாகவும், ஆனால், அவர் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று கூறிவிட்டதாகவும், பின்னர் தான் உடனடியாக சைவ உணவை சமைத்து கொடுத்ததாகவும், அந்த சமயத்தில் அவருக்காக சைவத்திற்கு மாறவும் செய்தேன் என்று வனிதா பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மேலும், பிரபுதேவாவை நான் காதலிக்கவில்லை என்றால் நான் சினிமாவிற்கே வந்திருக்க மாட்டேன். என் வாழ்க்கை மாறி இருக்கும் காதலிச்சா பிரபுதேவாவே தான் காதலிப்பேன் என்று முடிவு பண்ணிட்டேன். அப்போது, அப்பா இந்த பொண்ணு மெண்டல் ஆகுது என்று பிரபுதேவா வீட்டிற்கு வந்த சமயத்தில், அப்போதெல்லாம் கேமரா வீட்டில் இருப்பதே அதிசயம். என் அக்காவிடம் கேமராவை கொடுத்து போட்டோ எடுக்க சொன்னேன். ஆனால், அந்த புகைப்படத்தை பிரிண்ட் எடுத்து பார்த்தால் பிரபு தேவாவின் தலை கட்டாகிவிட்டது. அதன் பின்னர் என் அக்காவை கொலை வெறியில் கண்டமேனிக்கு திட்டிவிட்டேன் என்று வனிதா தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

தகுதியானவர்களின் மகளிர் உரிமைத் தொகையும் நிராகரிப்பு? கொந்தளிக்கும் பெண்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…

11 minutes ago

அடேங்கப்பா.! எம்ஜிஆர்-ன் கருப்பு கண்ணாடி ரகசியம்…போட்டுடைத்த பார்த்திபன்.!

எம்ஜிஆ-ரின் கருப்பு கண்ணாடி ரகசியம் தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல்…

27 minutes ago

சம்பளம் பாக்கி வைத்தாரா தனுஷ்? காசு விஷயத்தில் காயப்படுத்திய எஸ்கே… பகீர் சம்பவம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…

1 hour ago

விதியை மீறிய கோலி..கண்டுக்காத பாகிஸ்.வீரர்கள்…இந்திய அணிக்கு அடித்த லக்.!

ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…

1 hour ago

வீடு புகுந்து பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்கு மிரட்டல்.. நகை, செல்போன் பறிப்பு : கோவையில் பகீர்!

கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…

2 hours ago

ஒரு மாதத்திற்குள் OTT-க்கு தாவும் விடாமுயற்சி…தேதி குறிச்சாச்சு..!

OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…

3 hours ago

This website uses cookies.