4-வது காதல் உறுதி… விரைவில் கல்யாணம்? புது குண்டு போட்ட வனிதா!

Author: Shree
1 June 2023, 7:42 pm

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த இத்திருமணத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி , தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.

அதன் பின் பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அண்மையில் தான் மரணமடைந்தார். இந்நிலையில் 3வது கணவர் பீட்டர் பால் இறந்து ஒரு மாத்த்திற்குள் வனிதா தனது 4வது திருமணம் குறித்து பிட்டு போட்டுள்ளார்.

ஆம், சமீபத்திய பேட்டி ஒன்றில், திருமணம் குறித்த கேள்விக்கு, “ஆண்டவன் அருளால் எனக்கு திரும்பவும் யார் மீது வேண்டும் என்றாலும் காதல் ஏற்படலாம். அப்படி நடந்தால் இந்த முறை நிச்சயம் சரியான முடிவை எடுப்பேன் என வனிதா புது குண்டு தூக்கி போட்டுள்ளார். அம்மணி யாரையோ மடக்கிட்டாங்க போல அதனால் தான் இப்படி ஓப்பனாவே சொல்றாங்க… அது சரி யார் அந்த நபர் என அதையும் ஒரு கை பார்த்திடலாம் என ரசிகர்கள் கிண்டலாக கூறி வருகிறார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1035

    16

    32