நம்ப வேண்டாம்னு அப்பவே சொன்னாங்க.. மரண படுக்கையில் வனிதாவை எச்சரித்த தாய்..!

Author: Vignesh
19 September 2023, 2:15 pm

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த இத்திருமணத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி , தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.

அதன் பின் பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அண்மையில் தான் மரணமடைந்தார். வனிதா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கூடவே தனது பிஸினஸையும் கவனித்து வருகிறார். கடைசியாக அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை வனிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் மறைந்த தனது அம்மா மஞ்சுளாவை குறித்து உருக்கமாக பேசியிருந்தார். அதில், நான் அம்மா மீது மிகவும் பாசம் கொண்டவள். என்னுடைய அம்மா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவர் உயிரோடு இருந்த போது இரவு நேரங்களில் எனக்கு தினமும் போன் செய்து என்ன பண்ற என கேட்டு விசாரிப்பார். ஒரு சில நாட்கள் திடீரென வந்து வீட்டு கதவை தட்டுவார். இதெல்லாம் அம்மா இறந்த பிறகு ரொம்ப மிஸ் பண்ணினேன். பல இரவுகளில் தூக்கமில்லாமல் அழுந்து கொண்டு இருப்பேன். இப்போதெல்லாம் கதவை தட்டி விசாரிக்க யாரேனும் வரமாட்டாங்களா என ஏங்கியிருக்கிறேன் என மிகவும் உருக்கமாக பேசியிருக்கிறார்.

மேலும், குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று அம்மா விரும்பியதாகவும், உனக்கும் சொத்தில் பங்கு உண்டு அவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள். நான் இருக்கும் போதே என்னிடம் கேள் என்றார் அம்மா. ஆனால், நான் என் அம்மாவிடம் அவரைவிட பெரிய செல்வம் எனக்கு இல்லை என சொன்னேன். அன்று அம்மாவின் விருப்பத்திற்கு அப்பா தலையசைத்தார். ஆனால், தாயின் மரணத்திற்கு பிறகு என்னை கைவிட்டு விட்டார்கள். என் அப்பா குடும்பத்தை நம்ப வேண்டாம் என அப்போது அம்மா சொன்னார். ஆனால், நான் நம்பினேன் என்று கூறியுள்ளார் வனிதா.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 495

    0

    0