கிட்ட கூட போக முடியுமானு தெரியல.. எமோஷனல் ஆகி கண்கலங்கும் வனிதா விஜயகுமார்..!

Author: Vignesh
30 July 2024, 2:38 pm

அந்தகன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமாரிடம் அவரது மகன் கதாநாயகனாக நடிக்க உள்ளது குறித்தும் அவரது சினிமாவின் அறிமுகம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த வனிதா விஜயகுமார் “என்னோட எமோஷன்களை எல்லாம் ரொம்ப நாள் கண்ட்ரோல் பண்ணி வைத்திருந்தேன். தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடும்னு சொல்லுவாங்க ஸ்ரீஹரிக்கு அவ்வளவு பெரிய படம் கிடைக்கும்னு எதிர்பார்க்கல, நல்ல தயாரிப்பு நிறுவனம் பிரபு சாலமன் மாதிரி மிகப்பெரிய டைரக்டர் படத்துல அறிமுகம் ஆகுறான்.

சிங்கத்தோட நடிக்கிறான்னு சொல்றாங்க.. சிங்கத்துக்கு கூட பழகி நடிக்கிறதை நினைச்சாலே பயமாயிருக்கு.. ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் கூட சிங்கத்துக்கிட்ட என்னால போக முடியுமான்னு.. தெரியல, ரொம்ப பெருமையா இருக்கு”… என்று வனிதா விஜயகுமார் மகன் குறித்து எமோஷனலாக பேசி இருந்தார். அப்போது, வனிதா விஜயகுமாரின் கண்கள் லேசாக கலங்கியது. மேலும், அங்கிருந்த நடிகர் பிரசாந்த் வனிதா விஜயகுமாரின் மகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 178

    0

    0