எங்களுக்குள் இது தான் இருக்கு: உச்ச நடிகரின் வாரிசு குறித்து வரலக்ஷ்மி ஓபன் டாக்..!
Author: Vignesh15 March 2023, 3:45 pm
டோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.
வரலட்சுமி சரத்குமார் அடுத்தடுத்து தற்போது பல படங்கள் பிசியாக நடித்து வரும் நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு தற்போது பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் உங்களுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இடையே என்ன பிரச்சனை என தொகுப்பாளர் கேட்டதற்கு பதில் வரலட்சுமி சரத்குமார் ”தானும் ஸ்ருதியும் சிறுவயதிலிருந்து ஒரே பள்ளியில் படித்ததாகவும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் ஒரே கேங் என்றும், அதே சமயம் தாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமான தோழிகள் சிடையாது எனவும், ஆனால் இதுவரை தங்கள் இருவருக்கும் இடையில் எந்த மனஸ்தாபமும் ஏற்பட்டது இல்லை எனவும், இதுபோக இதுவரை தாங்கள் இருவரும் 2 படங்களில் சேர்ந்து நடித்துள்ளதாகவும், எதற்காக இப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை என்பது மாதிரியான பேச்சு எங்கிருந்து வந்தது என்று தனக்கே தெரியவில்லை எனவும், மேலும் பொதுவாக தான் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதோ தன்னைப் பற்றிய ரூமர்களுக்கு செவி சாய்ப்பதோ கிடையாது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேலும், தான் இதுவரை எந்த ஒரு ரூமர்ஸ்க்கும் இடம் கொடுக்கும் அளவிற்கு நடந்து கொண்டதும் இல்லை எனவும், தன்னை பற்றியும் தனது சக நடிகையான ஸ்ருதிஹாசன் பற்றியும் இணையதளத்தில் பரவி வந்த வதந்திகளுக்கு இவ்வாறு முற்றுப்புள்ளி வரலட்சுமி வைத்துள்ளார்.