கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.
குறிப்பாக பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. வரலட்சுமி சரத்குமாரின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. அவரது பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனர் பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில், தாரை தப்பட்டை படத்தில் சசிகுமாரை விட்டுவிட்டு ஆர் கே சுரேஷ் திருமணம் செய்து கொள்வார். அப்போது, முதல் இரவு காட்சியில் வில்லன் ஆர் கே சுரேஷ் வரலட்சுமியை எட்டி மிதித்து தாக்குவது போல ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.
அந்த காட்சியின் போது நடந்த விஷயத்தை வரலட்சுமி கூறியுள்ளார். அந்த காட்சி படமாக்கப்பட்ட போது வரலட்சுமி ஆர் கே சுரேஷிடம் டேய் பார்த்து மீதி டா ரொம்ப பீல் பண்ணி மிதிச்சுடாதேன்னு சொன்னேன். ஆனால், அவன் கேட்கல மிதி மிதின்னு மிதிச்சான் அப்பவே கழுத்துல ஒரு சத்தம் கேட்டுச்சு.. ஆனா, அந்த ஷார்ட் ஓகே ஆகாமல் அடுத்த ஷாட் எடுத்தாங்க.. அந்த ஷார்ட் முடிஞ்சதும் பாலா தன் கழுத்தில் போட்டு இருந்த செயினை கழட்டி என் கழுத்தில் போட்டு பாராட்டினார். அப்போது நான் ஷார்ட் முடிஞ்சா சார் என்றேன். அவர் ஆமாம் என்று சொன்னதும், ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வரேன் என்று சொல்லிட்டு வந்துட்டேன் என்று வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.