டாய்லெட் கழுவ கூட ரெடி.. உதவுங்க கண்ணீர் மல்க மடிப்பிச்சை கேட்கும் காமெடி நடிகை வாசுகி..!
Author: Vignesh19 July 2024, 11:38 am
தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் உடன் பல படங்களின் காமெடி ரோலில் இணைந்து கலக்கிய நடிகை வாசுகி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய நூற்றுக்கும் மேற்பட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து, படங்கள் நடித்தாலும் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் ஒரு சமயத்தில் இருந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு சினிமா வாய்ப்பும் இல்லாமல், தனது சொந்த ஊரான காரைக்குடிக்கே சென்றுவிட்டார். தற்போது, அவர் எந்த வேலையும் இல்லாமலும், சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது, நடிகை வாசுகி சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெயலலிதா புகைப்படம் பதித்த பெரிய டாலர், பெரிய சைன், வைர மூக்குத்தி, காலில் அரை கிலோ கொலுசு இதெல்லாம் நான் போட்டு இருந்தேன்.
அவர் இறந்த பிறகு அதை எல்லாவற்றையும் விற்று விட்டேன். எனக்கு கர்ப்பப்பையில் மூணு கட்டிகள் இருந்தது. அதையும் எடுத்துவிட்டார்கள். தமிழ்நாட்டில், பிறந்த எனக்கு நடிகர் சங்கம் உதவவில்லை. எந்த நடிகரும் எனக்கு உதவி செய்யவில்லை. ஆனால், தெலுங்கு சினிமாவில் சில நடிகர்கள் அங்குள்ள நடிகர் சங்கம் எனக்கு உதவிகள் செய்து வருகின்றன. ரேஷன் கடையில் தரும் அரிசியை வைத்து சாப்பிட்டு வருகிறேன். எனக்கு தங்குவதற்கு ஒரு இடமும் வேலையும் கொடுத்தால் போதும், நான் பிழைத்துக் கொள்வேன். இப்போது, நான் ரோடு ரோடு ஆக திரிகிறேன். தயவுசெய்து எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என கண்ணீர் மல்க அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
மேலும் பேசுகையில், நான் டாய்லெட் கழுவ கூட ரெடியாக இருக்கேன். யாராவது எனக்கு வேலை கொடுங்கள் என கவுண்டமணியுடன் காமெடியில் கலக்கிய நடிகை வாசுகி பரிதாபமாக கேட்பது காண்போரை கலங்கச் செய்கிறது. ஒரு நடிகைக்கு இப்படிப்பட்ட நிலையா என அதிர வைக்கிறது.