45வது பிறந்தநாள் கொண்டாடும் வித்யா பாலனின் சொத்து எத்தனை கோடி தெரியுமா?
Author: Rajesh1 January 2024, 2:02 pm
இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன். பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன். மிகவும் சவாலான தைரியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்துவார்.
அந்தவகையில் சில்க் ஸ்மிதாவின் பயோபிக் திரைப்படமான ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார்.
இவர் அஜித்திற்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடும் வித்யா பாலனுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த சமயத்தில் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. ஆம், இவரின் சொத்து மதிப்பு ரூ. 130 கொடியாம் . இவர் ஒரு படத்திற்கு ரூ. 2 முதல் ரூ. 3 கோடி சம்பளம் வாங்குகிறார். இது தவிர பங்களா , சொகுசு கார்கள், ரியல் எஸ்டேட் சொத்துக்கள் என பல லட்ச கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார் வித்யாபாலன்.