நடிகர் விஜய், சூர்யா நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிகை விஜயலட்சுமி நடித்து நடிகையாக பிரபலமானவர்.
நடிகை விஜயலட்சுமி கன்னட நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து விஜயலட்சுமி, பூந்தோட்டம், கலகலப்பு, பிரண்ட்ஸ், மிலிடரி, பாஸ் என்கிற பாஸ்கரன், தம்பி கோட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
நடிகை விஜயலட்சுமி இதற்கிடையில் சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார். அதாவது, நாம் தமிழர் கட்சியில் தலைவர் சீமானை பற்றி அவதூறாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும், தன்னை சீமான் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்து சீமானை மிக தரக்குறைவாக பேசி விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களையும் அடிக்கடி இழிவாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தநிலையில், சமூக வலைதளங்களில் நடிகை விஜயலட்சுமி, சீமானை திட்டும் வீடியோக்களை பதிவிட்டு திமுகவினர் சிலர் நாம் தமிழர் கட்சியினரை கிண்டல் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஒரு அதிரடி வீடியோவை விஜயலட்சுமி வெளியிட்டார். அதில், சும்மா சீமானை செருப்பால் அடிப்பேன் என்றும், தன் சந்தோஷத்தில் மண்ணை அள்ளி போடாதீங்க எனவும், தனக்கு என்ன பண்ணனும் தெரியும் எனவும், அதை சீமான் பண்ணுவார் எனவும், நாம் தமிழர் தொண்டர்கள் பண்ணுவார்கள் என்றும், உங்கள் வேலையை பாருங்கள் என அந்தர் பல்ட்டி அடித்துள்ளார்.
மேலும், கூறுகையில், தான் சீமானை மிக மிக அதிகமான காதலிப்பதாகவும், தான் அவருடன் வாழ்ந்து இருப்பதாகவும், சீமான் முதல் மனைவி தான் தான் என்றும், அவரை தன் மூச்சாக பார்ப்பதாகவும், சீமான் மாமா என்று தான் சொல்லி பேசப்போகிறேன் எனவும், தான் மாமான்னு சொன்னால் தான் நீங்கள் யாரை அழவிட்டு இருக்கீங்கன்னு அவருக்கு ஞாபகம் வரும் என தெரிவித்துள்ளார்.
தான் நிம்மதியாக தூங்கி 12 வருடம் ஆகிவிட்டது எனவும், சீமான் மாமா தினமும் தான் அழுது கொண்டு இருப்பதாகவும், 2 வருடமாக நீங்கள் தன் கூட வாழ்ந்தபோது விதவிதமான நம்பிக்கை கொடுத்தீங்க என்றும், ஆனால், திடீரென்று தன்னை பைத்தியம் ஆக்கிவிட்டு நடுரோட்டில் விட்டு விட்டு போயிட்டீங்க எனவும், தனக்கு எப்போ நியாயம் கிடைக்கப்போகுதுன்னு எல்லோருமே கேக்குறாங்க. என்றும், தான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று கர்நாடக மக்களுக்கு மட்டுமே தெரியும் என தெரிவித்துள்ளார்.
எத்தனை நாள் தான் நம்முடைய விஷயத்தை பொதுவெளியில் அசிங்கப்பட வைத்துக் கொண்டே இருக்க போறீங்க? என்றும், இதை நீங்களே பேசி பிரச்சனையை முடித்துவிட்டு போயிருக்கணும் எனவும், இல்லையா தான் அவமானப்படுவதை எத்தனை நாள் தான் நீங்க பார்க்க போறீங்க? சீமான் மாமா என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.
மேலும், கூறுகையில், உங்க கூட வாழ்ந்த மனசாட்சி உங்களுக்கு இருந்துச்சுன்னா தனக்கு உதவுங்கள் என்றும், தான் வேண்டாம் என்று சொல்லவில்லையே எனவும், உங்களுக்கு மனைவி, குழந்தை இருக்காங்க என்று தனக்கு தெரியும், என்றும், தான் கயல்விழி மேல் பொறாமை படவில்லை என்றும், தான் உங்களுக்கு ஒவ்வொரு முறை வீடியோ அனுப்பும் போதும் கயல்விழியை நல்லா பாத்துக்கோங்க, பிரபாகரன் பாப்பாவ நல்லா பாத்துக்கோங்கன்னு தானே சொல்லி இருக்கிறேன் எனவும், என்னைக்காவது தன் கூட வந்து வாழுங்கள் மாமான்னு உங்களை கூப்பிட்டேனா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தனக்கு கயல்விழி மேல் பொறாமை கிடையாது என்றும், நீங்க நல்லா வாழனும் மாமா என்றும், நம்ம பிரச்சனையை தீர்க்க வேண்டியது உங்கள் கடமை தான் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். நம்ம விஷயத்தை நீங்கள் நினைத்தால் தீர்த்து வைக்க முடியும் என்றும், தனக்கு மிகவும் அசிங்கமாக இருக்கு சீமான் மாமா என்று தெரிவித்து இருக்கிறார்.
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…
ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்…
விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…
கும்பமேளாவில் தமன்னா தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா,இந்த…
அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட ரெடி நடிகர் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி…
This website uses cookies.