அந்த உடை அணியசொல்லி அட்வைஸ் கொடுத்த நெட்டிசன்.. சிறப்பான பதிலடி கொடுத்த VJ அர்ச்சனா..!

Author: Vignesh
15 June 2023, 6:30 pm

அர்ச்சனா விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் சின்னத்திரையில் பிரபலமான விஜேவாக திகழ்பவர். இவர் ‘டாக்டர்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். அர்ச்சனா டிவி, யூடிப் சேனல் என்று கலக்கி வருகிறார்.

VJ Archana-updatenews360

சின்னத்திரையில் பிரபலமான இவர் ‘அச்சும்மா’ என்ற பெயராலே தற்போது ரேடியோ மிர்ச்சியிலும் அழைக்கப்படுவதால் ரசிகர்களுடன் ஒரு கனெக்ட் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவர் சன் டிவி, விஜய் டிவி, ராஜ் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் ஹீட்டான நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். 1999 ஆம் ஆண்டு கல்லூரி படிக்கும்போதே தொகுப்பாளினியாக பயணித்து தொடங்கியவர் விஜே அர்ச்சனா.

vj-archana-updatenews360

இவர் சன் டிவியில் தொகுத்து வழங்கிய இளமை புதுமை நிகழ்ச்சி ஒரு பெரிய ரீச் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சில இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார். இப்போது ஜீ தமிழில் சரி கம பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதற்கு முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது மொத்த பெயரையும் டேமேஜ் செய்து கொண்டார். இந்நிலையில், தனது வீட்டில் வாராஹி அம்மன் பூஜை செய்து வழிபட்ட வீடியோவை இணையதளத்தில் பதிவு செய்து இருந்தார். அது குறித்து நெடிசன் ஒருவர் அர்ச்சனாவை பார்த்து கமெண்ட் செய்துள்ளார்.

vj-archana-updatenews360

நிகழ்ச்சிகளுக்கு ரீல் செய்யும்போதெல்லாம் பாரம்பரியமாக புடவை கட்டும் நீங்கள் வலையில் போட்டு எல்லாம் போட்டு இருக்கீங்க பூஜை செய்யும் போது மட்டும் புடவை அணியாமல் மாடல் உடைகள் வருகிறீர்களே புடவை அணியலாமா என கமெண்ட் செய்திருக்கிறார்.

அதில், எத்தனையோ சந்தர்ப்பங்களில் நல்ல சேலை கட்டி பொட்டு வச்சு ஆக்சஸரீஸ் எல்லாம் போட்டு ரெடி ஆகுறீங்க, ரீல்ஸ் ஏன் ப்ரோமோஷன் கூட அப்படி பாரம்பரியமா ரெடி பண்ணிக்கிறீங்க.. சில பூஜை செய்யும் போது ஏன் சீலை உடுத்தவில்லை பொட்டு வச்சு சேலை கட்டி கையில வலையல் எல்லாம் போட்டு இருக்கலாமே என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

vj-archana-updatenews360

இதற்கு எந்தவித கோபமும் படாமல் அர்ச்சனா சில சமயங்களில் கடவுள் முன் நீங்கள் உங்கள் அடிப்படைகளில் இருக்க முடியும். அவளை கவர வேண்டிய அவசியமில்லை. நாம் நாமாகவே இருக்கலாம். எளிமையானது. மேலும் இது பார்க்கும் கண்களை பொருத்து என்று பதில் கொடுத்துள்ளார். தற்போது அர்ச்சனாவின் இந்த பதில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 793

    1

    0