யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் முதல் முதலில் நடித்த படம் சந்தானத்தின் ” இனிமேல் இப்படிதான் ” இந்த படத்தில் இவர் சில காரணங்களால் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போக பிறகு அப்படத்தில் இவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டன .அதன் பின் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.
அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் .தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். படம் முழுக்க முகம் சுளிக்க வைக்கும் வகையில் இரட்டை அர்த்த வரிகளும் ஆபாச காட்சிகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது இதனால் இவர் பல மோசமான விமர்சனங்களுக்கு உள்ளானார்.
சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாகவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார் இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது . பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓட்டு எண்ணிக்கையில் தோற்றுப்போய் பாதியிலேயே வெளியேரினார்.
அதன் பின் பட வாய்ப்புகள் வர தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா, சல்பர், எஸ்.ஜே.சூர்யா-வோடு ஒரு படம் என என அடுத்தடுத்து 5 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் . 4 மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் ஒப்பந்தம் ஆகியிருந்த படங்களில் நடிக்க முடியாமல் போக பட தயாரிப்பாளர்களும் , இயக்குனர்களும் செய்வதறியாது குழம்பி விட்டனர். சில பாடங்களில் யாஷிகா பாதி வரை நடித்திருந்ததால் அவற்றை நீக்கவும் முடியாமல் இயக்குனர்கள் தவித்தனர் இதனால் தயாரிப்பாளர்களும் , இயக்குனர்களும் படப்பிடிப்பை ஒத்திவைத்திருந்தனர். உடல் நிலை பற்றிஇன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.
யாஷிகா ஆனந்த்தின் பதிவுகளுக்கு பலரும் நெகட்டிவ் கருத்துகளை அளித்து வந்தாலும் சிலர் அவர்களுக்கு ஆறுதலான கமெண்ட் அளித்து வந்தனர். இதனால் மனமுடைந்த யாஷிகா ஆனந்த் அவ்வப்போது சோகமான பதிவுகளை போஸ்ட் செய்து வந்தார். தற்போது முழுமையாக குணமடைந்த யாஷிகா மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட துடங்கிவிட்டார்.
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
This website uses cookies.