அதை பண்றதையே விட்டுட்டேன்.. நல்லா தூங்கி பல நாள் ஆச்சு.. யாஷிகா வேதனை..!
Author: Vignesh10 April 2024, 6:42 pm
யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.
அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் .தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.
மேலும் படிக்க: Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!
சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாகவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார் இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .
மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!
அதன் பின் பட வாய்ப்புகள் வர தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா, சல்பர், எஸ்.ஜே.சூர்யா-வோடு ஒரு படம் என என அடுத்தடுத்து 5 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் . சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது.
சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் ஒப்பந்தம் ஆகியிருந்த படங்களில் நடிக்க முடியாமல் போக பட தயாரிப்பாளர்களும் , இயக்குனர்களும் செய்வதறியாது குழம்பி விட்டனர். சில பாடங்களில் யாஷிகா பாதி வரை நடித்திருந்ததால் அவற்றை நீக்கவும் முடியாமல் இயக்குனர்கள் தவித்தனர் இதனால் தயாரிப்பாளர்களும் , இயக்குனர்களும் படப்பிடிப்பை ஒத்திவைத்திருந்தனர். தற்போது முழுமையாக குணமடைந்த யாஷிகா மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட துடங்கிவிட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் கலந்து கொண்ட யாஷிகா மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார். அதாவது, 17 வயதில் முரட்டு குத்து படம் நடித்ததாலும் கிளாமர் ரோலில் நடிக்கும் போது நிஜ வாழ்க்கையில் அப்படித்தான் இருப்பார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். நெகட்டிவ் ஆக பேசுவார்கள், அப்படித்தான் பார்ப்பார்கள். எனக்கு ஹேட்டர்ஸ் இருந்தால் தூரத்தில் இருந்து என்னை பார்த்து எஞ்சாய் பண்ணுங்க என்று சொல்வென்.
நான் வெஜ் உணவு சாப்பிட்டு வருகிறேன். எனக்கு ஒரு அலர்ஜி இருக்கிறது. நான்வெஜ் சாப்பிட்டால் உதடு வீங்கிவிடும், கண்ணுக்கு கீழ் பெரிதாகிவிடும் ஐ படத்தில் வர விக்ரம் போல் மாறிவிடுவேன் என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார். மேலும், கார் விபத்திற்கு பின்னர் இரவு தூங்கி பல ஆண்டுகள் ஆகிறது எனக்கு தூக்கமே வராது. காலை 5 மணிக்கு மேல் தான் நான் தூங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், புல்லட் ஓட்டுவதையும் நிறுத்திவிட்டேன். புல்லட் ஓட்டினால் ஒரு பயம் வருகிறது என்று வெளிப்படையாக அவர் பேசி உள்ளார்.