திடுதிப்புன்னு இப்படி ஒரு முடிவா.. மனம் மாறிய யாஷிகா ஆனந்த்… ரசிகர்கள் அதிர்ச்சி…!

Author: Rajesh
11 March 2022, 1:21 pm

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

இதனிடையே கடந்த வருடம் கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் படுகாயம் அடைந்தார். அவரது தோழி பாவனி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். யாஷிகா பல மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்த அவர் தற்போது நடக்க தொடங்கி இருக்கிறார். நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க்க தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் யாஷிகா தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்து இருக்கிறார். உடல் முழுவதும் பல அறுவை சிகிச்சைகள் செய்து இருப்பதால் இனி பைக் மற்றும் கார் ஓட்ட மாட்டேன் என தெரிவித்து உள்ளாராம். மேலும், ஒரு பைக் வைத்திருந்த நிலையில் தற்போது அதை அவரது சகோதரரிடம் கொடுத்து விட்டாராம்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!