கூவத்தூர் ரகசியம் அந்த 10 நாட்கள்.. சிக்கலில் சிக்கிய நடிகைகள்; ஏ.வி. ராஜுவை விளாசிய பிரபலம்..!
Author: Vignesh20 February 2024, 2:41 pm
தமிழக அரசியல் குழப்பங்களில் தலைமைச் செயலகத்தை விட கூவத்தூர் கோல்டன் பே நட்சத்திர விடுதிதான் ஒரு சமயத்தில் மிகவும் முக்கிய இடம் வகித்தது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் வரை அனைத்து எம்எல்ஏக்களும் விடுதியில் தான் தங்க வைக்கப்பட்டனர். அப்போது, அந்த பத்து நாட்களில் விடுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன் அந்த விடுதியை சுற்றி இருந்த கிராம மக்கள் கூட அவர்களது வீடுகளுக்கு செல்ல கெடுபிடிகள் பின்பற்றப்பட்டன. ஒரு சமயம் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களும் அப்போது தாக்கப்பட்டனர். முன்னதாக சசிகலா மட்டும் அடிக்கடி கூவத்தூர் விடுதிக்கு சென்று எம்எல்ஏக்கலை சந்தித்து பேசியும் வந்தார்.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ வி ராஜு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான புகார்களை முன்வைத்து வருகிறார். அவர் பேசியுள்ள விஷயங்கள் இணையதளத்தில் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
அதிலும், தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷாவின் பெயரை கூறி கூவத்தூர் ரிசாட்டில் என்ன நடந்தது என்பது பற்றி அவர் பேசிய விஷயம் மிகப் பெரிய பிரளயத்தையே அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி கோலிவுட்டிலும் ஏற்படுத்தி இருக்கிறது.
கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி நீ கூவத்தூரில் என்ன கூத்து அடித்தாய் எம்எல்ஏ வெங்கடாசலம் என்ன கூத்து அடித்தார் என்ன செய்தார் அங்கே நடிகைகளுடன் என்ன செய்தார் என்பது எனக்குத் தெரியும். நடிகை திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாசலம் அடம்பிடித்தார் என்றும், கர்ணாஸ் தான் அங்கே நடிகைகளை வரவழைக்க ஏற்பாடு செய்தார் என்றும், த்ரிஷாவுக்கு ஒரு நாளைக்கு 25 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும், ஏவி ராஜு தெரிவித்துள்ளார்.
வெங்கடாசலம் குடிக்க மாட்டார். ஆனால், பெண்கள் விஷயத்தில் அவர் வீக் என்பதால் அதற்காக நடிகைகளை ஏற்பாடு செய்து பல நடிகைகள் அங்கே வந்தார்கள். சின்ன வயதான திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாசலம் அப்போது அடம் பிடித்தார். இதற்கு ஆதாரத்தை நான் காட்ட முடியாது. இதெல்லாம் நடந்தது இதற்கெல்லாம் ஏற்பாடு செய்ததை அவர் தான் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சி உண்டாக்கியுள்ளது.
கூவத்தூர்ல விபச்சாரம் பண்ணிருக்கு திரிஷா. கருணாஸ் மாமா வேலை பாத்துருக்கான். 🤮 @trishtrashers pic.twitter.com/CpABQiLJEc
— TN Theatres (@TNTheatres_) February 19, 2024
ஏவி ராஜூ அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது, விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுகுறித்து, பலரும் ஏவி ராஜூவிற்கு கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்தவகையில், நடிகை ஷர்மிளாவும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், என்ன முட்டாள்தனமாக இந்த தோழர் இப்படி பேசுகிறார்? அவர் தனது தனிப்பட்ட பழிவாங்கலுக்காக சினிமாவில் பெண்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்றும், ஒட்டுமொத்த மீடியாவும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு வெளியே முகாமிட்டிருந்தது. இத்தனை ஊடகத்தையும் மீறி ஒரு பிரபல நடிகையை அங்கு அழைத்துச் செல்வது எப்படி சாத்தியம்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.