இதெல்லாம் ஒரு முகமா?.. முழுசா வேகாத முட்ட போண்டா மாதிரி இருக்கு.. பிரபல நடிகை மீது வன்மத்தை கக்கிய ஹீரோயின்ஸ்..!
Author: Vignesh6 January 2024, 6:30 pm
கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
கீர்த்தி சுரேஷ்க்கு முதல் படம் தோல்வியானாலும், நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டான போது கோடம்பாக்கத்தில் உள்ள பல நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மீது வன்மத்தை கக்கினார். இது எல்லாம் ஒரு முகமா?.. முழுசா வேகாத முட்ட போண்டா மாதிரி இருக்கு.. என்று பலராலும் விமர்சிக்கப்பட்டார் கீர்த்தி சுரேஷ்.
நடிகர் திலகம் சாவித்திரி எங்கே கீர்த்தி சுரேஷ் எங்கே என்று கடுமையான விமர்சனங்களும் இவர் மீது வைக்கப்பட்டது. அப்படி ஒரு எதிர்ப்புக்கு மத்தியில் தன்னுடைய நடிப்பில் சரியான பதிலடி கொடுத்து அதற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் அந்த சமயத்தில் பெற்றார்.
அதன் பின் உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி நடிகையாக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். கீர்த்தி சுரேஷை அந்த சமயத்தில் பல நடிகைகள் ஓரங்கட்ட பார்த்ததாக செய்யாறு பாலு பேட்டியில் தெரிவித்துள்ளார்.